தென்மராட்சி - வேம்பிராயில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு...!
யாழ். தென்மராட்சி - வேம்பிராய். பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வேம்பிராயில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டன. இதனையடுத்து காணியின் உரிமையாளரால் பொலிஸார் ஊடாக இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் அங்கிருந்த வெடிபொருட்களை. மீட்டுச் சென்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை