• Breaking News

    தொற்றும் மரணமும் நாட்டில் அதிகரிப்பு!



    நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை மற்றும் கொரோனா மரணங்களில் அண்மைக்காலமாக சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன என்று இலங்கை மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. 

    கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட தன் பின்னரான பொதுமக்களின் நடத்தையின் விளைவுகளை இன்னும் 2 முதல் 3 வாரங்களில் அறிந்துகொள்ள முடியும் என்று அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் பத்மா குணரத்ன தெரிவித்தார். 

    நாட்டில் கோவிட்-19 தொற்றுநோய் ஆபத்து விலகிவிட்டதாக யாரும் கருதக்கூடாது. தொற்று நோயாளர்களைக் கண்டறியும் வகையில் நாட்டில் எழுமாற்றான பி. சி. ஆர். பிரிசோதனைகளை அதிகரிக்குமாறும் கண்காணிப்புக்களைத் தீவிரப்படுத்துமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 

    இதேவேளை, பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

    அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் வரை பாடசாலைகளை தொடங்குவதற்கு காத்திருப்பது தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad