• Breaking News

    டக்ளஸிற்கும் சிறீதரனுக்குமிடையே சபையில் நடந்த கடுமையான வாக்குவாதம்...

     நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாளும் அல்ல பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


    நாடாளுமன்றத்தில் இன்று சிறீதரன் உரையாற்றும் போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஒரு கட்டத்தில் சிறீதரனின் உரையை குறுக்கீடு செய்த டக்ளஸ், மகிந்த ராஜபக்ச காலத்தில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.

    அதேநேரம் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே, வடக்கிற்குப் போதைப் பொருட்கள் அறிமுகமானதாக சிறீதரன் தெரிவித்துள்ளார்.

    இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுந்து பதிலளிக்க முற்பட்டபோது அவரது ஒலிவாங்கி செயற்பட்டிருக்கவில்லை.

    அதற்கு முன்னரும் நாம் செய்திருப்போம். ஆனால், நீங்கள் செய்யவிடவில்லை. பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் மறைக்கலாம் என கூறியுள்ளார்.

    இதற்குப் பதிலளிக்கையிலேயே பதவிகளுக்காகக் கால் கழுவிப் பிழைப்பதற்காகத் தான் அரசியல் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad