• Breaking News

    இன்று காலை ஏற்பட்ட துயரம்! திருகோணமலையில் இழுவைப்படகு கவிழ்ந்ததில் இதுவரை எழுவர் உயிரிழப்பு!!!

     


    கிண்ணியா - குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கியுள்ளனர். 

    இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

    பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் எனப் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது.


    இந்த இழுவைப்படகில் சுமார் 20 மாணவர்கள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 7 மரணங்கள் உறுதியாகியுள்ளது.

    காப்பற்றப்பட்டவர்கள் நோயாளர்காவு வண்டி மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதுடன் இவ்விபத்தில் பலர் மரணித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.


    எனினும் சரியான மரண விபரம் இன்னும் தெரியவராத நிலையில் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad