எளிதில் வீடு வாங்குவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இலங்கை எங்கே உள்ளது தெரியுமா?
பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்ட கட்டுமானப் பொருட்கள் விநியோகஸ்தரான Roofing Megastore என்ற அமைப்பு, வீடு வாங்குவதற்கு உகந்த சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஒரு நாட்டில் வழங்கப்படும் மாத வருவாய் மற்றும் வீட்டின் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு நோக்கும்போது, எளிதில் வீடு வாங்க இயலும் நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது சவுதி அரேபியா. அதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, பியூர்ட்டோரிக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.
அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்வீடன், இத்தாலி மற்றும் பிரித்தானியா முதலான நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, எளிதாக வீடு வாங்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக 14 வது இடத்தைப் பிடித்துள்ளது கனடா.
உலகில் எந்த நாட்டில் வீடு வாங்குவது கஷ்டம் என்ற ஒரு பட்டியலும் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அந்த பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது கானா, அடுத்ததாக, இலங்கை, அதைத் தொடர்ந்து, ஹொங்ஹொங், ஜமைக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.
கருத்துகள் இல்லை