குடும்ப பெண்ணின் சங்கிலியை அறுத்துச் சென்ற திருடர்கள்...!
கோயிலுக்கு சென்ற குடும்பப் பெண்ணொருவரது தங்கச் சங்கிலியை திருடர்கள் இருவர் அறுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் இன்று (16) மதியம் 12 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுழிபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் சித்தங்கேணி சிவன் ஆலயத்திற்கு வந்து, துவிச்சக்கர வண்டியை நிறுத்தும்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் குறித்த குடும்பப்பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது 3 3/4 சங்கிலியில் அரைவாசி திருடனின் கைகளிலும் மிகுதி அந்த பெண்மணியின் கைகளிலும் அகப்பட்டடது.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை