• Breaking News

    கொழும்பு நோக்கி படையெடுக்கும் மக்கள்...! காரணம் தெரியுமா...?

     ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெருந்திரளான ஆதரவாளர்கள் கொழும்பை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

    அதன்படி போகம்பர, ஹல்துமுல்ல, அரலங்வில, பாணங்துர போன்ற பகுதிகளில் இருந்து இவ்வாறு மக்கள் பேருந்துகளில் வருகின்றனர்.

    இவ்வாறு ஆர்ப்பாட்டத்திற்காக வருபவர்கள் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், சில பகுதிகளில் இவ்வாறு வருவோர் திருப்பியனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்க விடுக்கப்பட்ட கோரிக்கைகள் சில நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad