ஏழாலையில் இளைஞன் மீது வாள்வெட்டு...!
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் வசிக்கும் 23 வயது இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வாள்வெட்டிற்கு இலக்கான இளைஞன் தனது வீட்டு படலையில் நின்றவேளை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த இளைஞன் மீது வாள்வெட்டினை மேற்கொண்டனர். இன்போது இளைஞனது கையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை