• Breaking News

    மாதகலில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு பாரிய எதிர்ப்பால் கைவிடப்பட்டது...!


     யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

    மாதகல் ஜே/150 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களும் சொந்தமான 3 1/4 பரப்பு காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று காலை குறித்த பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

    பிரதேச மக்களினதும் அரசியல்வாதிகளதும் கடும் எதிர்ப்பினால் நில அளவைத் திணைக்களத்தினர் அவ்விடத்திலிருந்து திரும்பிச் சென்றனர்.

    திரும்பிச் சென்ற நில அளவை திணைக்களத்தினர் சிறிது தூரம் சென்று அவ்விடத்தில் தரித்து நின்றனர் மீண்டும் அவ்விடத்துக்கு சென்ற மக்கள் நில அளவைத் திணைக்களத்தினருடன் முரண்பட்டனர்.

    அதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் தம்மை கடற்படையினர்தான் நிற்குமாறு கூறியதாக கூறினர்

    அதன் பின்னர் சற்று நேரத்தில் அங்கிருந்து அவர்கள் திரும்பி சென்று விட்டனர்.

    அதன் பின்னர் குறிப்பிட்ட கடற்படை முகாம் முன்பாக மக்களும் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸ் பொறுப்பதிகாரி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல் செய்யவுள்ளதாக கூறினார். அதன் பின்னர் மக்களால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad