உங்கள் வீட்டில் இந்தப் பொருட்கள் உள்ளனவா??? உடனே தூக்கி வீசுங்கள்...
உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் செல்வம் வருவதைத் தடுக்கலாம்.
அவற்றை உடனடியாக தெரிந்து கொண்டு உடனே அகற்றுவது நல்லது.
அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குப்பைத் தொட்டி
உங்கள் குப்பைத் தொட்டி வீட்டிற்குள் இருக்கக்கூடாது. அது எதிர்மறை சக்தியை உங்கள் வீட்டிற்குள் ஈர்க்கும். எனவே வீட்டுக்கு வெளியே வையுங்கள்.
பழைய நிதி ஆவணங்கள்
பழைய ரசீதுகள், வங்கி அறிக்கைகள் மற்றும் கடன் அறிக்கைகள் போன்றவற்றை அகற்றவும். இவையும் எதிர்மறையை ஈர்க்கின்றன என்பதை நினைவில் கொள்ளவும். முடிந்தால் டிஜிட்டல் பிரதிகளை உருவாக்குவது சிறந்தது.
அழுக்கு ஜன்னல்கள்
உங்கள் ஜன்னல்களை தூசி படாமல் வைத்திருக்க வேண்டும் மற்றும்அவற்றை சுத்தப்படுத்தும் வேலையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் நிதிக்கு துடிப்பான ஆற்றலை அமைக்கிறது.
இறந்த தாவரங்கள்
உங்கள் தாவரங்களை கவனித்து, அவ்வப்போது அவற்றைப் புதுப்பிக்கவும். வீட்டினுள் இறந்த செடிகளை ஒருபோதும் வைக்க வேண்டாம். இது மிகவும் மோசமான எதிர்மறை ஆற்றலை உங்கள் வீட்டிற்குள் அழைத்துவரும்.
கசியும் குழாய்கள்
உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், அவ்வாறு இருந்தால், அவற்றை உடனடியாக சரிசெய்யவும்.
கருத்துகள் இல்லை