நடிப்பைத் தாண்டி தயாரிப்பிலும் கொடி கட்டி பறக்கும் சூர்யா.. இத்தனை படங்களா.!
தமிழ் சினிமாவில் விஜய், அஜீத்துக்கு அடுத்தப்படியாக முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளவர் சூர்யா. இவருடைய திரைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
2015: சூர்யா முதலாவதாக அவர் மனைவி ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை தயாரித்தார். இப்படத்தை ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருந்தார். அதே ஆண்டில் சூர்யா மற்றும் அமலாபால் சேர்ந்து நடித்த பசங்க 2 திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
2016: சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், விக்ரம் குமார் இயக்கத்தில் 2016 இல் வெளிவந்த திரைப்படம் 24. இப்படத்தில் சூர்யா, நித்யா மேனன், சமந்தா நடித்து இருந்தனர்.
2017: குற்றம் கடிதல் திரைப்படத்தை இயக்கிய பிரம்மா மகளிர் மட்டும் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடித்து இருந்தார். ஊர்வசி, பானுப்பிரியா,சரண்யா பொன்வண்ணன், நாசர், லிவிங்ஸ்டன் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.
2018: பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார்.
2019: 2016-ல் வெளியான உறியடி திரைப்படத்தின் தொடர்ச்சியாக உறியடி2 எடுக்கப்பட்டது. இப்படத்தை விஜயகுமார் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இதில் கதாநாயகியாக அறிமுக நாயகி விம்சயா நடித்திருந்தார். இப்படத்தை சூர்யா தயாரித்திருந்தார், இதே ஆண்டு ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான ஜாக்பாட் திரைப்படத்தையும் தயாரித்திருந்தார்.
2020: ஜோதிகா,பாக்கியராஜ், பார்த்திபன் ஆகியோர் நடித்து ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்கிய படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தை சூர்யா தயாரித்திருந்தார். 2020ஆம் ஆண்டு அதிரடி திரைப்படமாக சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று சூர்யா இப்படத்தை தயாரித்து, நடித்திருந்தார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். சூரரைப்போற்று படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
2021: மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன் நடித்து தற்போது வெளியாகியுள்ள ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
கருத்துகள் இல்லை