• Breaking News

    மக்களையும் ஊடகவியலாளர்களையும் படம்பிடித்து அச்சுறுத்துவது போல் செயற்பட்ட கடற்படை வீரர்...!


     கடற்படை வீரர் ஒருவர் மக்களையும் ஊடகவியலாளர்களையும் படம்பிடித்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.

    இன்று மாதலில் இரு கிராம சேவகர் பிரிவுகளில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை நில அளவைத் திணைக்களம் மேற்கொண்டது.

    இதன்போது அரசியல் பிரமுகர்களும் மக்களும் அவ்விடத்தில் ஒன்றுகூடி பாரிய எதிர்ப்பைக்காட்டி காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை முறியடித்தனர்.

    இதன்போது அங்கிருந்த கடற்படை வீரர் ஒருவர் குழுமியிருந்த மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் விதத்தில் காணொளி பதிவுசெய்துள்ளார்.

    குறித்த கடற்படை வீரரின் இந்த செயற்பாட்டிற்கு அங்கிருந்தவர்கள் விசனம் தெரிவித்தனர். 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad