ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன..?
பெண்கள் எதையெல்லாம் தங்களிடம் எதிர்பார்ப்பார்கள் என்பது, பொதுவாக ஆண்களிடம் இருக்கும் ஒரு கேள்வி. இந்த கேள்விக்கான பதில் மிகவும் எளிதான ஒன்று. ஆடம்பரம், பொருளாதாரம் இல்லையென்றாலும், இந்த குவாலிட்டி உங்களிடம் இருந்தால் நிச்சயம், அவை உங்களைத் தேடி வரும். பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை கொள்வார்கள். அப்படியான குவாலிட்டி என்ன என கேட்கிறீர்களா?. உங்களுக்கான பதில் இதோ..
1. நேர்மை : பெண்கள், தாங்கள் விரும்பும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நேர்மையை தான். உங்களின் உணர்ச்சிகள் எதுவாக இருந்தாலும், அவர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். நீங்கள் ஏதேனும் ஒன்றை மறைக்க முற்படும்போது, அவர்களுக்குள் உங்கள் மீது சந்தேகம் ஏற்படும். நல்ல விஷயமாக இருந்தாலும், அது பெண்களுக்கு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
2. ஏற்றுக்கொள்ளுதல் : தங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அப்போது, உங்கள் மீது அன்பும், பாசமும் அதிகரிக்கும். சில விஷயங்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், அவர்களே உணர்ந்து கொண்டு உங்களிடம் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பார்கள்
3. நம்பிக்கை: ரிலேஷன்ஷிப்பிற்கு மிக முக்கியமான அஸ்திவாரம் நம்பிக்கை. அந்த நம்பிக்கை கேள்கவிக்குள்ளாகும்போது எந்த ரிலேஷன்ஷிப்பும் நிலைக்காது. நம்பிக்கையாக இருக்கும்போது, அவர்களை யாரும் பிரிக்க முடியாது. அப்படியான நம்பிக்கையை பெண்கள், ஆண்களிடம் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
4. இலக்கு: தெளிவான கண்ணோட்டத்தில் இலக்கு நோக்கி பயணிக்கும் ஆண்களை, பெண்கள் விரும்புவார்கள். இலக்கை அடைய நினைப்பவர்களிடம் சில கட்டுப்பாடுகளும், வெளிப்படையான பார்வையும், செய்ய வேண்டிய செயல்கள் குறித்த தெளிவும், போகும் பாதை குறித்த புரிதலும் சரியாக இருக்கும். அத்தகைய ஆண்களை பார்க்கும்போது, பெண்கள் ஈர்ப்பு கொள்வார்கள்.
5. உணர்ச்சிகள் : பெண்களிடம் உணர்ச்சிகளை வெளிக்காட்டும்போது, உங்களை அரவணைக்க தயங்கமாட்டார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதனை அப்படியே அவர்களிடம் வெளிப்படுத்திவிடுங்கள். உங்களுக்கான தீர்வை நிச்சயம் கொடுப்பார்கள். அவர்கள் முன் நீங்கள் அழுதால், சோர்வாக இருந்தால், விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தால் அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.
6. சப்போர்ட் : முடிவு எடுப்பதிலும், ஒரு செயலை செய்வதற்கும் பெண்கள் தங்களுக்கான சப்போர்ட்டை எதிர்பார்ப்பார்கள். அந்த தோழமையை நீங்கள் கொடுக்க ஒருபோதும் தவறாதீர்கள். சப்போர்டிவ்வாக இருக்கும் யார் ஒருவரும் பெண்களின் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். கடினமான காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க மறவாதீர்கள்.
7. தன்னடக்கம் : தற்பெருமை, பொறாமை குணம் கொண்டவர்களை பெண்களுக்கு பிடிக்காது. தன்னடக்கத்துடன் நடத்து கொள்ளும் ஆண்களை அவர்கள் அதிகம் விரும்புவார்கள். வார்த்தைகளில் உண்மையும், நேர்மையும் இருந்தால், அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.
8. உறுதி : நிலையான அல்லது உறுதியான மனநிலையில் பயணிக்க ஆண்கள் முயற்சி செய்ய வேண்டும். குழப்ப மன நிலையில் இருப்பவர்களை பெண்களுக்கு பிடிக்காது. வார்த்தை, நடவடிக்கையில் உறுதியாக இருந்தால், பெண்களுக்கு பிடிக்கும். உங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தயங்கமாட்டார்கள் என்பதால், இந்த குவாலிட்டியை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை