மீண்டும் ஆரம்பமான விமானசேவை - கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானம்...
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமான நிலையில் நேற்று (21) காலை முதலாவது ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
1964 இல் ரஷ்யா இலங்கையுடனான விமான சேவைகளை தொடங்கியது. உலகளாவிய கொரோனா தொற்றுநோய் காரணமாக 2020 இல் இடைநிறுத்தப்பட்டது.
ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து SU-284 எனும் ரஷ்ய Aeroflot விமானம் நேற்று காலை 10.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமானத்தில் 240 பயணிகள் இருந்தனர். ரஷியன் ஏரோஃப்ளோட் மொஸ்கோ, ரஷ்யா மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையே வாரத்தில் இரண்டு நாட்கள், ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி விமானங்களை இயக்குகிறது.
கருத்துகள் இல்லை