காரைநகர் பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்...
காரைநகர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கைலாயபிள்ளை நாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
சபையின் தமிழரசுக் கட்சியின் தவிசாளர் அண்மையில் காலமானதையிட்டு ஒரு உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் சபையின் வலந்தலை வட்டார உறுப்பினராக நாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அலுவலர் ராஜேந்திரன் கிறிஸ்ரி அமல்ராஜ் குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2ம் திகதி வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை