காரைநகர் விபத்தில் ஒருவர் பலி...! மற்றையவர் படுகாயம்...!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் இன்னொரா இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று மாலை காரைநகர் டிப்போ சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றையவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
காரைநகர் நெய்தலைச்சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை