கட்டுப்பாட்டு விலை நீக்கத்தால் அதிகரிக்கும் சீனியின் விலை
சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் இன்று முதல் ஒரு கிலோ சீனியின் விலை 150 ரூபாயிற்கு மேல் உயர்வடைகிறது.
நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் வாழ்க்கை செலவு குழு நேற்று கூடிய நீக்கப்படுவதாகத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை கிலோவுக்கு ரூ. 135 - 140ஆக உயர்வடைகிறது.இதனால், ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 150 ரூபாயிற்கு மேல் உயர்வடைந்துள்ளது. இந்த விலையுயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது.
இதேவேளை, அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை