• Breaking News

    யாழ். கைதடி பகுதியில் விபத்துக்குள்ளானது ஹையேஸ்

    யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 வீதியினூடாக பயணித்த ஹையேஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கைதடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் குடைசாய்ந்துள்ளது.

    இவ் வாகனத்தில்  எட்டுப்பேர் பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். இதில் ஓட்டுனருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

    அந்த வாகனத்தில் இரண்டு சிறார்கள் உட்பட எட்டுப்பேர் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad