வேலணையில் விடுதலைப் புலிகளின் க்ளைமோர் மீட்பு...!
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை - அம்பிகா நகர் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் அதிசக்தி வாய்ந்த க்ளைமோர் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றில், பகுதியளவில் மண்ணில் புதைந்திருந்த இந்த க்ளைமோர் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
வழங்கிய தகவலின் அடிப்படையில் க்ளைமோரினை மீட்ட இராணுவத்தினர் அதனை பலாலி இராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அந்த க்ளைமோரில் " கொல்பவன் வெல்வான், எதிரியின் பக்கம், தயாரிப்பு தமிழீழம்" என்ற வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை