• Breaking News

    மன்னார் - இராணுவ முகாம் பகுதியில் கரையொதுங்கியுள்ள மர்மப்பொருள்

     


    மன்னார் - சௌத்பார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று காலை மர்மப்பொருளொன்று கரையொதுங்கியுள்ளது. 

    குறித்த மர்ம பொருள் தொடர்பாக அப்பகுதி கடற்படையினர், மன்னார் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் உடனடியாக அப்பகுதிக்கு பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினர் வருகை தந்தனர்.


    கரையொதுங்கிய பொருளானது பல்வேறு மின் சுற்றுக்களுடன் காணப்பட்ட நிலையில் அதிரடிப் படையினர் அதனை மீட்டு சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

    எனினும் குறித்த மர்மப் பொதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எவ்வித பொருட்களும் இல்லை என தெரியவந்துள்ளது.

    மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad