• Breaking News

    இலங்கை நாடாளுமன்றில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!!!


     இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

     இன்று தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67 ஆவது பிறந்த தினம் என்பதால் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்தும் சபையில் உரையாற்றிய அவர், 

    போர் காலத்தின்போது கிபிர் விமானங்கள் வந்தால், தமிழ் மக்கள் எந்தளவு பயந்தார்களோ, அதேபோன்று இன்று மஹாவலி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது தமிழ் மக்கள் அச்சப்படுகிறார்கள். 

    மஹாவலி அதிகார சபையின் திட்டங்கள், தமிழ் மக்களுக்கு எதிரான திட்டங்களாகவே அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    எனவே மஹாவலி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகள் நிறுத்தப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதேவேளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இரசாயன உற்பத்தி பொருட்களாகவே இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசாங்கம் மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் தனிப்பட்டவர்களுக்கு இலாபம் தரும் திட்டங்களாகவே அமைந்துள்ளதாக நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

    அரசாங்கத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்ற போதும் அவர்களால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவர்களால் தீர்க்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad