வட்டுக்கோட்டையிலும் நால்வருக்கு நீதிமன்றினால் தடை உத்தரவு...!
மாவீரர் தின நிகழ்வினை நடாத்துவதற்கான தடை உத்தரவானது நீதிமன்றங்களினால் பல்வேறு தரப்பினருக்கும் விதிக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் மாவீரர் நினைவேந்தலை நடாத்துவதற்கு, மல்லாகம் நீதிமன்றினால், வட்டுக்கோட்டையில் நால்வருக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் மற்றும் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பொன்ராசா ஆகியோருக்கு, மல்லாகம் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை