தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி...!
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், சிறந்த நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் இலேசான இருமல் இருந்தது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை