மாவீரர் தினத்திற்கு பொலிஸார் முன்வைத்த தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்தது மல்லாகம் நீதிமன்றம்...
மாவீரர் தினத்துக்கு தடைகோரி வட்டுக்கோட்டை, இளவாலை, அச்சுவேலி, சுன்னாகம், கோப்பாய், தெல்லிப்பழை, மானிப்பாய் மற்றும் மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் இணைந்து மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஐம்பது பேருக்கு மாவீரர் நினைவேந்துலுக்கு தடை விதிக்க கோரி எட்டு பொலிஸ் நிலையங்களினால் மல்லாகம் நீதிமன்றுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கினை விசாரித்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான், தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு நியாதிக்கம் இல்லை எனத் தெரிவித்து வழக்கினை தள்ளுபடி செய்வதாக உத்தரவிடாடிருந்தார்.
அத்துடன் அவர்கள் இலங்கையின் சட்டத்திட்டங்களை மீறுவார்களேயானால் அவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பொலிஸாரை எதிர்வரும் 29ஆம் திகதி அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் நீதிவான் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை