வலி. மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மக்களது பார்வைக்கு...
வலி. மேற்கு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது மக்களது பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாக சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் வீதி, சுழிபுரம் தலைமை அலுவலகம், சங்கானை, சுழிபுரம், வட்டுக்கோட்டை மற்றும் அராலி ஆகிய உப அலுவலகங்களிலும் இந்த வரவு செலவுத்திட்டமானது பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே மக்கள் எதிர்வரும் 2021.11.22ஆம் திகதி வரை தமது அபிப்பிராயங்கள் மற்றும் ஆலோசனைகளை சபைக்கு முன்வைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை