டிக்டாக்கில் மனித எலும்புகளை விற்கும் அமெரிக்க இளைஞன்
அமெரிக்காவை சேர்ந்த ஜான் பிச்சாய பெர்ரி (Jon Pichaya Ferry) என்ற 21 வயது இளைஞர், டிக்டாக்கில் மனித எலும்புகளை விற்று வரும் ஆச்சரிய சம்பவம் நடந்து வருகிறது. இவரது டிக்டாக் 500,000 ஃபொலோயர்களையும் 22 மில்லியன் லைக்குகளைக் கொண்டது.
Jon Pichaya Ferry |
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்தவர் ஜான் பிச்சாய பெர்ரி (Jon Pichaya Ferry). இவர் தன் வீட்டில் மனிதர்களின் மண்டை ஓடுகள், கை, கால், இடுப்பு எலும்புகளை டிக்டாக்கில் விற்பனை செய்து வருகிறார்.
ஒவ்வொரு எலும்புக்கும், ஒவ்வொரு விலை நிர்ணயித்து விற்பனை செய்து வருகிறார். இதன் விலை இலங்கை ரூபாய் மதிப்பின்படி ரூ.3000த்திலிருந்து ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்கிறாராம்.
Jon Pichaya Ferry |
இந்த சம்பவத்தை சட்டத்திற்கு புறம்பான ஒன்று என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இவருக்கு எப்படி இத்தனை எலும்புகள் கிடைத்தது என்று பலர் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.
இதற்கு பதிலளித்துள்ள ஜான் , TikTokக்கில் மனித எலும்புகள் விற்பது சட்டவிரோதமானது ஒன்றும் கிடையாது என்றும், தன்னிடம் மருத்துவர்கள், எலும்பியல் நிபுணர்கள், மருத்துவ மாணவர்கள், கலைஞர்கள் ஆகியோர் எலும்புகளை வாங்கி படித்து தெரிந்து கொள்வதாகும் தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை