• Breaking News

    சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் - இளவாலை வடமேற்கு பகுதி மக்கள் பெரும் பாதிப்பு...


    யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, இளவாலை வடமேற்கு ஜே/222 கிராம சேவகர் பிரிவில் சீரற்ற காலநிலையால் 26 குடும்பங்களை சேர்ந்த 96 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் இரண்டு இடை தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    குறித்த பகுதிக்கு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

    அத்தோடு இராணுவத்தினரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் மக்களை சென்று பார்வையிட்டுள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad