கடமையை செய்யவிடாது ஊடகவியலாளரை படம்பிடித்த இராணுவத்தினர்...!
ஊடகவியலாளர் கு.பிரதாபன் இன்றையதினம் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை இராணுவத்தினர் அவரை விசாரித்ததுடன் புகைப்படம் பிடித்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.
குறித்த ஊடகவியலாளர் இன்று சாவகச்சேரி சந்தைக்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில் அங்கிருந்த இராணுவத்தினர் அவரை விசிரித்தனர்.
இதன்போது அவர் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையினை காண்பித்து தான் ஒரா ஊடகவியலாளர் என்பதை உறுதிப்படுத்திவிட்டு தனது கடமையில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது இராணுவத்தினர் அவரை புகைப்படம் பிடித்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டனர்.
இவ்வாறு ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் விதத்தில் இராணுவத்தினர் செயற்படுவதால் ஊடகவியலாளர்கள் கடமைகளை சரியாக செய்ய முடியாது பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர் என்பதுடன் இந்த ஆட்சியில் ஊடக சுதந்திரம் என்பது குழிதோண்டி புதைக்கப்பட்டது அப்பட்டமாக தெரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை