• Breaking News

    கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் பலி...!

     


    கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, தம்பலகாமம் நோக்கிப் பயணித்த கனரக வாகனத்துடன் வான் ஒன்று மோதியதில், இவ்விபத்து சம்பவித்துள்ளது.


    விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம் சிராஜ் நகரைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான, எம்.எஸ்.எம்.கரீம் ( வயது - 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    சாரதியின் அருகாமையில் இருந்தவரே உயிரிழந்த நிலையில், வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதரஸ்கொடுவ காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad