வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு தொடர்ந்தும் இடமளிக்கவேண்டும்
கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வீட்டிலிருந்தவாறே தமது தொழிலை முன்னெடுப்பதற்கு தொடர்ந்தும் இடமளிக்கவேண்டும் என இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கோவிட் தொற்றாளர்கள் மற்றும் கோவிட் உயிரிழப்புக்களில் சிறிதளவு அதிகரிப்பு காணப்படுவதாகவும் அவர்குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது காணப படும் நிலைமைக்கு அமைய, அனைவரும் ஒன்றிணைந்து இதனை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என அவர் கூறினார். நோய் பரவல் முடிவடைந்துவிட்டதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறமுடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை