பொலிஸாருக்கு தகவல் வழங்கினார் எனக்கூறி ஒருவரது மோட்டார் சைக்கிள் அடித்துடைப்பு...!
பொலிஸாருக்கு தகவல் வழங்கினார் எனக்கூறி பொன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் அடித்துடைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று மாலை 6.30 மணியளவில், கசிப்பு விற்பனை குற்றச்சாட்டில் பெண் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் கைதிற்கான தகவலை வழங்கியதாக தெரிவித்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டு வீசபட்டு இருந்தது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் நொறுக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்டதோதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை