வேட்டையாடுபவர்களால் தும்பிக்கை துண்டிக்கப்பட்ட யானை...!
இந்தோனேசியாவில் வேட்டையாடுபவர்களின் வலையில் சிக்கிய, யானைக்குட்டி ஒன்று தும்பிக்கையை இழந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
இந்த யானைக்குட்டி அச்சே ஜயா நகரில் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைடுத்து அது, சிகிச்சைக்காக ஒரு பாதுகாப்பு நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது உடற்பகுதியை துண்டித்து அதன் உயிரைக் காப்பாற்ற முயற்சித்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனினும் "காயம் கடுமையாக இருந்ததால், அதைக் காப்பாற்ற முடியவில்லை" என்று “அச்சே“ இயற்கை வளங்கள் பாதுகாப்பு நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
வேட்டையாடுபவர்கள், ஆண் யானைகளையே குறிவைக்கின்றனர். ஏனெனில் அவை அதிக விலையுயர்ந்த தந்தங்கள் கொண்டவை. அத்துடன் அவை சட்டவிரோத தந்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
கருத்துகள் இல்லை