• Breaking News

    வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பாரிய நாளை போராட்டம்

     


    வடக்கு மாகாண ஆளுநர் செலயகத்திற்கு முன்பாக நாளையதினம் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் அரசினால் உர இறக்குமதி  நிறுத்தப்பட்டுள்ளதோடு  கால்நடைகளுக்கான  தீவனம் பெறுவதில்  இடர்பாடு காணப்படுவதனால்  விவசாயிகள் கால்நடை வளர்ப்போர்,பண்ணையாளர்கள்  பெரும் இடரினை எதிர்நோக்கி வருகின்றார்கள்.


    விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு  நீதி கோரி நாளை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கண்டன போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு  வலி வடக்கு பகுதியில்  நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில்  முதல் கட்ட நிதி மட்டுமேபயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


    மேலதிகமான  நிதி வசதிகள் இன்றுவரை  மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவே ஆனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து அவனுக்கு மாகாண ஆளுநர் செயல்களில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதோடு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்குச் சென்றுமகஜரும்  கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad