பெண்களே கண்களைக் காத்திடுங்கள்
பெண்களுக்கு அழகு சேர்ப்பவை, எழிலான கண்கள். எனவே பெண்கள் தங்கள் கண்களை கவனமாகக் காத்திட வேண்டும். கண்களுக்கு உபயோகப்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள், உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐலைனர் போன்றவற்றை 6 மாதத்துக்கு ஒருமுறை புதிதாக வாங்குவது அவசியம்.
பழைய அழகுசாதனப் பொருட்கள் கண்களைப் பாதிக்கும். இரவு உறங்கும்முன் கண் மேக்கப்பை முழுவதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே 'ஐ மேக்கப் ரிமூவர்' என்று கடைகளில் கிடைக்கிறது. 'பேபி ஆயில்' கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம்.
தினமும் உறங்கச் செல்லும் முன் முகத்தைக் கழுவி விட்டுச் செல்வது கண்களுக்கு மட்டுமல்ல, முகத்துக்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சினைகள் அறவே அண்டாது.
கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றைத் தவிர்த்து கண்களை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி பெண்கள் சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காகக் கடைபிடித்தாலே அவர்களது கண்கள் அழகாக, பளிச் சென்று இருக்கும்!
கருத்துகள் இல்லை