வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளருக்கு மல்லாகம் நீதிமன்றம் அழைப்பு...!
மாவீரர் தினம் அனுஷ்டிப்பது தொடர்பில் நீதிமன்றங்கள் ஊடாக அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்து வருகின்றது.
அந்தவகையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் மற்றும் உப தவிசாளர் கபிலன் ஆகியோரை நாளை திங்கட்கிழமை காலை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் நீதிமன்றம் கட்டளை விடுத்துள்ளது.
இந்த கட்டளையானது அச்சுவேலி பொலிஸ் ஊடாக நேற்றைய தினம் தவிசாளர் மற்றும் உபதவிசாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தினம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆகியன தவிசாளர் மற்றும் உப தவிசாளரால் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை