உரும்பிராயில் கவனயீர்ப்பு போராட்டம்...!
அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஆகிவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் உரும்பிராயில் அமைந்துள்ள கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் உணர்ந்துகொண்டு அதிபர் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
உங்கள் பிள்ளைகளின் இலவச கல்வியை வியாபாரம் ஆக்காதே, அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் போராட்டத்திற்கு உடன் தீர்ப்பு கொடு, எங்கள் பிள்ளைகளின் தரமான கல்விக்கு 6 வீதம் ஒதுக்கு என்பன போன்ற பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியருந்தனர்.
கருத்துகள் இல்லை