• Breaking News

    யாழில் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது!

     பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    யாழ். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

    பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று முன் தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உட்டுபத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்துவ அறிக்கைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    குறித்த 19 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad