நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த செவிலியர்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்
மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த செவிலியருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானை சேர்ந்த 34 வயதான அயுமி குபோகி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரிந்த காலங்களில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொலை செய்துள்ளதாக இவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு மாதங்களில் 20 பேரை கொன்று இருப்பது தெரியவந்தது.
Ayumi Kuboki (அயுமி குபோகி) |
பின்னர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் அஜார்படுத்தினர். நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் செய்த கொலைகள் யாவும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அந்த செவிலியர்க்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்களை முன் வைத்தனர்.
சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை செவிலியரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை