• Breaking News

    பூநகரி கௌதாரிமுனை கடலில் ஆணொருவரின் சடலம் மீட்பு...!

     பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை கடலில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

    கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை கடல் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

    குறித்த சடலமானது ஆணொருவரது என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad