எரிபொருளுக்கு மீண்டும் விலை சூத்திரம்?
எரிபொருளுக்கு மீண்டும் விலை சூத்திரம் கொண்டுவருவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு கொள்கை ரீதியான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்ஆர். ஆட்டிகல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் தற்போது ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 36 ரூபாவும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 60 ரூபாவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக இந்த வருடம் இதுவரையில் 210 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதுடன் அதில் 65 பில்லியன் ரூபா கொரோனா தடுப்பூசி கொள்வனவுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை