முல்லையில் ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினர் மூவர் பொலிஸாரினால் அதிரடிக் கைது...!
முல்லைத்தீவு மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வசந்திரன் என்பவர் தாக்கப்பட்டமை தொடர்பாக இராணுவத்தினர் மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து குறித்த ஊடகவியலாளர் இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பத்தின் அடிப்படையில் குறித்த இராணுவத்தினர் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இச் சம்பவத்திற்கு எதிராக முல்லைத்தீவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை