தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வு...!
தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் முதலாம் இடத்தினைப் பெற்ற கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையை கௌரவிக்கும் விஷேட நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.
தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான பாடசாலைகளில் முதலாம் இடத்தினை நிலைநாட்டி கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை விருதினை வியாழக்கிழமை(25) பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி திரு.ஆறுதிருமுருகன்,சிவபூமி பாடசாலை அதிபர் கலைவாணி குகதாஸன், ரிஷி தொண்டுநாத சுவாமிகள்,நல்லூர் பிரதேச செயலர், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகஸ்தர்களின் மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை