யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரெயில் தீப்பற்றியது...!
யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அண்மித்த போது திடீரென் தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (09.11) பிற்பகல் கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரத நிலையம் வவுனியா, தாண்டிக்குளத்தை அண்மித்த போது புகையிரதத்தின் கொட்பொக்ஸ் பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது.
இதனை அவதானித்த புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயணைக்கும் பம்பியை செயற்படுத்தி தீயினைக் கட்டுக்குள் கொண்டு வந்து அதனை அணைத்தனர்.
இதனையடுத்து புகையிரதத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சுமார் ஒரு மணித்தியாலய தாமதத்தின் பின் குறித்த புகையிரதம் கொழும்பு நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.
கருத்துகள் இல்லை