யாழ். தாவடி சந்தியில் விபத்து - தந்தையும் மாணவியும் படுகாயம்!
இன்று காலை, யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேருந்து ஒன்று, தாவடியில் உள்ள வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கொக்குவில் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு மாணவியை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதில் காயமடைந்த தந்தையும், மாணவியும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் தரம் 8இல் கல்வி கற்கும் ப.சரணிகா என்ற மாணவியும் அவரது தந்தையுமே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தோர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தோடு கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை