தீருவில் திடலில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி...!
யாழ்.வல்வெட்டித்துறை - தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்த நகரசபை உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் காவல்துறையினர் மறுப்பதால் அனுமதி வழங்க முடியாது என பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில் நகரசபையின் உறுப்பினர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக இன்று சபை அமர்வு கூட்டப்பட்டிருந்தது.
இதன்போது எடுக்கப்பட்ட சபை தீர்மானத்திற்கு அமைவாக, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து, ஒலிபெருக்கி பயன்படுத்துவதாயின் காவல்துறையினரின் அனுமதியை பெற்று, பூங்கா கட்டுமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையில், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் நினைவேந்தலை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை