போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படம்பிடித்த கடற்படை வீரர் : கை காட்டி மிரட்டிய புலனாய்வாளர்...!
இன்று (30) மாதகல் - குசுமாந்துறை, ஜே/150 கிராம சேவகர் பிரிவில் உள்ள தனியார் இருவருக்கு சொந்தமான 3 1/4 பரப்பு காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கிருந்த கடற்படை வீரர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படம்பிடித்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.
இதேவேளை அங்கிருந்த புலனாய்வாளர் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது கை காட்டி மிரட்டி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
போராட்டத்தின்போது ஆயுதம் தாங்கிய கடற்படையினர் போராட்டக்களத்தில் வரிசையாக நின்றனர்.
மக்களது ஜனநாயக முறையிலான போராட்டத்தை ஒடுக்கும் விதமாக இவ்வாறு செயற்படுவது, அரசின் அராஜக போக்கினை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது என மக்கள் விசனம் தெரிவித்தனர்.
நேற்றும் கடற்படை வீரர் ஒருவர் மாதகலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை மிரட்டும் விதத்தில் படம்பிடித்து குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை