வீதியில் முறிந்து விழுந்த மரம் - விரைந்து செயற்பட்ட வலி.மேற்கு பிரதேச சபையினர்...
வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீதியில் மரம் ஒன்று நேற்றையதினம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன் மின்சார இணைப்பும் சேதமடைந்திருந்தது.
இதனையடுத்து வலி.மேற்கு - சுழிபுரம் பிரதேச சபைக்கு தகவல் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச சபையின் ஊழியர்கள் மரத்தினை வெட்டி அவ்விடத்திலிருந்து அதனை அப்புறப்படுத்தினர்.
இதன்போது மின்சார சபையினரும் அவ்விடத்திற்கு வருகைதந்து மின்னிணைப்பினை சரிசெய்துவிட்டு சென்றனர்.
கருத்துகள் இல்லை