• Breaking News

    யாழ். சாவகச்சேரியில் குழந்தைகளுடன் இடம்பெயர்ந்து அவலநிலைக்குள் தள்ளப்பட்டுள்ள மக்கள்...

     யாழ். சாவகச்சேரி மகிளங்கேணி பிரதேச மக்கள் தற்போது ஏற்பட்ட காலநிலை சீற்றம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வீடுகளுக்குள் வெள்ளம் உட்சென்ற நிலையில் தற்போது 10 குடும்பங்களுக்கு மேல்  வள்ளுவர்  சனசமூக நிலையத்தில்  இடம்பெயர்ந்து இருக்கின்றனர்.

    அவர்களுக்கான உணவோ உடையோ இல்லாமல் பெரும் அவலநிலையில் இருப்பதனை அவதானிக்க முடிகிறது.

    சம்மந்தபட்ட அதிகாரிகள் தங்களை பார்வையிடவோ உதவி செய்யவோ முன்வரவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad