• Breaking News

    கண்ணைக் காக்கும் மருத்துவக் குறிப்புக்கள்



    உடம்பின் ஜன்னல் கண்கள் உலகையே நாம் கண்களால் தான் பார்க்கின்றோம்கண் பராமரிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக இன்றியமையாத ஒன்று அதற்கான சில தகவல்கள்


    உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவத்தல் இவற்றிற்கு கருஞ்சீரகத்துடன் நல்லெண்ணைய் சேர்த்து காச்சி அந்த எண்ணெயை கண்ணில் மேலும் கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண் எரிச்சலும் கண் சிவப்பும் மாறும்.

    பொன்னாங்கண்ணி கீரையை தினமும் காலையில் பச்சையாக மென்று சாப்பிட்டி ஒரு டம்ளர் பாலும் பருகி வந்தால் கண்பார்வை தெளிவு பெறும்.

    வெள்ளை சீனி, உப்பு மற்றும் அளவுக்கு மீறிய பால் மற்றும் மாவுப் பொருள்  போன்ற உணவு பொருட்கள் கண்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவைகள் இவற்றை இயன்ற அளவு குறைத்து கொள்வது நல்லது.

    காரட், பொன்னாங்கண்ணி, எலுமிச்சை, பலா, மா, கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, முருங்கை, கருவேப்பிலை, சாத்துக்குடி, திராட்சை, நெல்லி, வெள்ளரி, பேரிட்சை, இளநீர் போன்ற உணவுகள் சாப்பாட்டில் அளவுடன் சேர்த்தல் கண்ணிற்கு நலம்.

    அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து தூளாக்கி சுடுநீரில் தேன் கலந்து சாப்பிட்டால் கண்ணெரிச்சல் குணமாகும்.

    குங்குமப் பூவை தாய்ப்பாலுடன் சேர்த்து குழைத்து கண்களின் மேல் பற்றுப் போட்டால் கண்நோய் விரைவில் குணமாகி விடும்.

    கண்களின் இமைகளைச் சுற்றி ஏற்படும் கட்டிகளைக் கரைக்க துளசி இலைச்சாற்றைப் பூசினால் கட்டிகள் கரைந்து விடும்.

    கண்கள் குளிர்ச்சி பெறுவதற்கு வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வரலாம், அதனால் அது மட்டுமல்லாமல் மூளையும் பலமடையும்.


    குழந்தைகளுக்கு ஏற்படும் கண்நோய் குறைய நெல்லிக்காய் சாற்றைப் பிளிந்து பருகுவதற்குக் கொடுத்து வந்தால் விரைவில் குணமாகி விடும்.

    மூடிய கண் இமைகளின் மேல் பன்னீரை பஞ்சில் நனைத்து வைத்து வந்தால் இமை கருமை நிறமாக மாறும்.

    கண் குறித்த முக்கியமான விடயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். அது மட்டும் இல்லாமல் நேரத்திற்குத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரும்.

    கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்க வெள்ளரி துண்டுகளை வட்டமாக நறுக்கி கண்கள் மேல் வைத்து எடுக்கவும்.

    கண்களில் அதிகமாக எரிச்சல் இருந்தால் கண்களை மூடிக்கொண்டு கண்களுக்கு மேல் சிறிது விளக்கெண்ணெயை ஊற்றி மெதுவாக மசாஜ் செய்யவும். கண்கள் குளிஎச்சி அடையும்.

    நந்தியாவட்டைப் பூவை நன்கு சுத்தமான நீரில் கழுவி கண்களின் மேல் வைத்தால் கண்கள் பொலிவு பேறும்.

    வெண்ணையுடன் கொத்தமல்லி இலைச் சாற்றை பிளிந்து கண்களின் மேல் பூச்சாகப் பூசினால் கருவளையம் விரைவில் மறைந்து விடும்.

    கண்களைக் காக்கும் உணவுகள்:

    உணவில் பொன்னாங்கண்ணிகீரை அதிகமாக சேர்த்துக்கொண்டால் கண்கள் நன்றாகவும் பிரகாசமாகவும்   இருக்கும்.

    கண்கள் நல்ல அழகையும், ஒளியையும் பெற வேண்டுமானால் தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சுத்தமான தேனில் நனைத்து சாப்பிடவும்.

    தினமும் பச்சையாக ஒரு கரட் சாப்பிட்டால் கண்பார்வை தெளிவு பெறும்.



    தினமும் காலை வெறும் வயிற்றில் பாதாம் பருப்பு சாப்பிட்டுவந்தால் கண்களில் இருந்து நீர் வடிவதைத் தடுக்கலாம்.

    நாவல்பழம்  ஜூஸ் செய்து சாப்பிடுவது கண்களுக்கு நன்கு குளிர்ச்சி கிடைக்கும்.

    கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் நீங்க வாழைப்பூ வறை மற்றும், வெள்ளரிக்காய் சலாட் செய்து சாப்பிடலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்

    “கண்களைக் காப்போம் கழிப்புடன் வாழ்வோம்”

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad