வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் இத்தனையும் நடக்குமா...!
தினமும் வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க பெரிதும் உதவுகின்றது.
இதனை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடனடியாக வியர்வை உடம்பை விட்டு வெளியேறி நச்சு தன்மைகளை விரட்டுகிறது. வெறும் நீரை விட இதில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடித்தால் உடல் எடையை குறைக்க உதவும்.
குளிர் காலத்தில் தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் சளியினால் பல பிரச்னைகள் வரும். அப்போது வெந்நீர் குடிக்கும் போது தொண்டைக்கு இதமாக இருக்கும். சரி வாங்க வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்
முகத்தில் அதிகமாக எண்ணெய் பிசுபிசுப்புகள் படிவதால் மற்றும் காற்று மாசு போன்ற காரணங்களால் தான் பருக்கள் வருவதற்கு முக்கிய காரணமாய் இருக்கின்றது. இதனால் தினமும் வெந்நீர் குடித்து வந்தால் இது போன்ற கிருமிகளை அழிக்க உதவுகின்றது.
அசைவம் போன்ற உணவுகளை சாப்பிட்டு முடித்தவுடன் கட்டாயமாக வெந்நீர் குடிக்க வேண்டும். ஆவ்வாறு குடிக்கும் பொழுது செரிமானம் விரைவாக நடக்க உதவி செய்யும்.
நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால் அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால் வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக்கும்.
தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு தினமும் காலையில் மிதமான வெந்நீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.
கருத்துகள் இல்லை